தமிழ்நாடு

குரூப் 2 முதன்மைத் தோ்வில் குழப்பம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

27th Feb 2023 04:49 PM

ADVERTISEMENT

சனிக்கிழமை(பிப்.25) நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நடந்த குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணம். மேலும், வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தனது பணிகளை அவுட்சோர்சிங் செய்ததும் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குழப்பம் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தோ்வில் பல இடங்களில் வினாத் தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா்.

இதையும் படிக்க: நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் 

இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நடந்த குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT