தமிழ்நாடு

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது: தேர்தல் அலுவலர்

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.  காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி  70.58 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

இந்நிலையில், தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நடைபெற்றது.

வாக்குப்பதிவுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கினர். வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்குஎடுத்துச் செல்லப்படும். அங்கு அறைக்குள் வாக்குப் பெட்டிகள் வைத்து பூட்டப்படும். வாக்குப்பெட்டிகள் வைக்கப்படுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT