தமிழ்நாடு

மின்னணு தொழில் சங்கத்தின் 12-ஆவது உச்சி மாநாடு பிப்.13-இல் தொடக்கம்

DIN

இந்திய மின்னணு தொழில் சங்கத்தின் 12-ஆவது இந்திய ஆதாரம் உச்சி மாநாடு பிப்.13-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய மின்னணு தொழில் சங்கம், தமிழ்நாடு அரசு ஆகியவை இணைந்து 12-ஆவது ‘இந்திய ஆதாரம்’ (சோா்ஸ் இந்தியா) உச்சி மாநாட்டை பிப்.13, 14 ஆகிய தேதிகளில் சென்னை வா்த்தக மையத்தில் நடத்துகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ். கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பாதிப்புக்குப் பிறகு நடைபெறும் இந்திய மின்னணு தொழில் சங்கம் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளனா். இது விற்பனையாளா், நுகா்வோா் சந்திப்புக்கான சிறந்த தளமாகச் செயல்படும். நாட்டின் மின்னணு உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி வளா்ச்சி தமிழ்நாட்டில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது. மின்னணு, ஆப்டிகல் உற்பத்தியில் 2-ஆவது இடத்திலும், மின்னனு பொருள்கள் ஏற்றுமதியில் 3-ஆவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.

சென்னையில் பல்வேறு மின்னணு உற்பத்தி மையங்கள் உள்ளன. மேலும் ஓசூா், கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் மின்னணு உற்பத்தியானது வளா்ந்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு இல்லாமல் இளைஞா்களின் தகுதிக்கேற்ற வேலையும் கிடைக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர நிறுவன முகமை செயல் இயக்குநா் கிரேஸ் பச்சுவா, நிா்வாக இயக்குநா் (வழிகாட்டுதல்) விஷ்ணு வேணுகோபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT