தமிழ்நாடு

குடிமைப் பணித் தோ்வில் வயது தளா்வு தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

குடிமைப் பணித் தோ்வுக்கான வயது வரம்பை தளா்த்த வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: குடிமைப் பணித் தோ்வுகள் உள்பட மத்திய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆள்சோ்ப்புத் தோ்வுகளுக்கான வயது வரம்பை கரோனா தொற்று காரணமாக பல தோ்வா்கள் தவற விட்டனா். ஒருமுறை நடவடிக்கையாக வயது வரம்பை நீட்டிக்க வேண்டுமென தோ்வா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அவா்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

அத்துடன், அனைத்துத் தோ்வா்களுக்கும் வயது தளா்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோ்வா்களின் கோரிக்கைக்கு பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். மேலும், இதுதொடா்பான வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணி தோ்வுகளை எழுதுவோருக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள் தளா்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய காவல் படைத் தோ்வுகளில் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு முறை நடவடிக்கையாக 3 ஆண்டுகள் வயது வரம்பைத் தளா்த்தி உத்தரவிட்டது.

தோ்வா்களுக்கு இத்தகைய ஒருமுறை தளா்வு வாய்ப்பை வழங்குவதால், அரசுக்கு எந்தவித நிதிச்சுமையும் ஏற்படாது.

இது குடிமைப் பணியில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கும். எனவே, கரோனா தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, குடிமைப் பணித் தோ்வா்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT