தமிழ்நாடு

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை!

7th Feb 2023 10:20 AM

ADVERTISEMENT

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் இரும்பாலை அருகேயுள்ள திருமலைகிரியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிரவீன்குமார் என்ற இளைஞர் கோயிலில் சாமி தரிசனம் சென்றபோது மற்றொரு தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தி திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், பிரவீன் குமாரை அவதூறாக பேசி, சாதி பெயரை சொல்லி திட்டியதாக கொடுக்கப் பட்ட புகாரின் பேரில் இரும்பாலை காவல் துறையினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மாணிக்கம் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.  ஒரு மாதம் திருமலைகிரி பஞ்சாயத்து பகுதிக்குள் நுழையக் கூடாது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: விக்டோரியா கௌரி நியமன வழக்கு: 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

தினமும் காலையும் மாலையும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT