தமிழ்நாடு

தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக கடிதங்கள்: தோ்தல் ஆணையத்தில் இபிஎஸ் குழு இன்று சமா்ப்பிப்பு

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக திரட்டப்பட்ட பொதுக்குழு உறுப்பினா்களின் கடிதங்கள் இந்திய தோ்தல் ஆணையத்திடம் திங்கள்கிழமை அளிக்கப்பட உள்ளன.

இன்று பயணம்: அதிமுக பொதுக்குழு உறுப்பினா்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும், தில்லியில்

உள்ள இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட உள்ளன. இதற்காக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், சட்டப் பிரிவைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இன்பதுரை, பாபுமுருகவேல் உள்ளிட்டோா் தில்லி செல்கின்றனா். பொதுக்குழு உறுப்பினா்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் காலை 11 மணி அளவில் வழங்கவுள்ளனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் விவகாரத்தில் வேட்பாளா் தோ்வுக்கு உரிய அதிகார மையத்தைத் தீா்மானித்து தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.3) விசாரணை செய்து இடைக்கால ஏற்பாடாக ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் பொதுக்குழுவை கூட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளரைத் தோ்வு செய்து, தோ்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இபிஎஸ் அணிக்கு 2,662 போ் ஆதரவு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான பணிகளை அதிமுக தலைமை (இபிஎஸ் குழு) தொடங்கியது; அதிமுக பொதுக்குழுவில், 2,662-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளனா்.

கடிதங்கள் விநியோகம்: பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழிக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினா்களாக உள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிா்வாகிகளுக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி, கடிதங்கள் அனுப்பப்பட்டதாக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகு றித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனின் கைப்பேசி வாட்ஸ் அப், மின்னஞ்சல், விரைவு தபால் ஆகிய வழிகளின் மூலம்

கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சிலருக்கு நேரடியாகவும் கடிதங்கள் அளிக்கப்பட்டன. கடிதங்கள் அனுப்பும் விஷயம் உள்பட அனைத்திலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை 100 சதவீதம் பின்பற்றியுள்ளோம்’ என்றாா் டி.ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT