தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர்!

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், யாசகர் ஒருவர் நான்காவது முறையாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகப் பணம் கொடுத்துள்ளார்.
 
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வழக்கம் போல குறைதீர் நாள் முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து கோரிக்கை பெற்றுக்கொண்டார். அதுசமயம் பூல்பாண்டி என்ற யாசகர் ஒருவர், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10,000 நிதியை அளித்துள்ளார்.
நான்காவது முறையாக நிதி அளித்துள்ள அவர், இதுவரை ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் வழங்கியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நிதி வழங்கி வருவதாக முன்பு அவர் கூறிவந்தார். ஆனால் தற்போது அவர் கூறுகையில், 

நிதி வழங்கியது தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான படம் செய்திகளை, தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் காண்பித்து, தொகை வசூலித்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அவர் யாசகம் பெற்று நிதி வழங்குவதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் முக்கிய பிரமுகர்களிடம் பணம் வசூலிப்பதாக அவர் கூறியுள்ளார். இது நன்கொடை வசூலிப்பதற்கு சமம். எனவே, உண்மையாகவே வசூலிக்கும் தொகைகளை ஆட்சியரகத்தில் ஒப்படைத்து வந்தாலும், இந்த தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT