தமிழ்நாடு

அதிகாரபூர்வ வேட்பாளர் யார்?- ஓபிஎஸ் ஆலோசனை

6th Feb 2023 12:25 PM

ADVERTISEMENT

அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் விவகாரத்தில் வேட்பாளா் தோ்வுக்கு உரிய அதிகார மையத்தைத் தீா்மானித்து தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.3) விசாரணை செய்து இடைக்கால ஏற்பாடாக ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. 

அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் பொதுக்குழுவை கூட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளரைத் தோ்வு செய்து, தோ்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான பணிகளை அதிமுக தலைமை (இபிஎஸ் குழு) தொடங்கியது; அதிமுக பொதுக்குழுவில், 2,662-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளனா். 

இதையும் படிக்க- குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

ADVERTISEMENT

இதடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக திரட்டப்பட்ட பொதுக்குழு உறுப்பினா்களின் கடிதங்கள் இந்திய தோ்தல் ஆணையத்திடம் திங்கள்கிழமை மாலை அளிக்கப்பட உள்ளன. இதற்காக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் இன்று காலை தில்லி புறப்பட்டு சென்றனர். அதேசமயம் வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

வேறு வேட்பாளரை முன் நிறுத்துவது குறித்து எந்த ஒரு வாய்ப்பும் வழங்கவில்லை. அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் தமிழ்மகன் உசேன் ஒருவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்று அவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து ஆதரவு படிவங்களை பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT