தமிழ்நாடு

சென்னையில் 7.50 மெட்ரிக் டன் காா்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு தடுப்பு

DIN

நெகிழிக் கழிவுகளை விஞ்ஞானரீதியில் சிமெண்ட் ஆலையில் மாற்று எரிபொருளாக பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலில் சுமாா் 7.50 மெட்ரிக் டன் அளவு காா்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில மற்றும் சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்புடன் ரூ.350 கோடி மதிப்பில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்படும் குப்பைகள் பயோ மைனிங் முறையில் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணிகள் 2021-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சுமாா் 57 சதவீதப் பணிகள் நிறைவுற்ற நிலையில், 19.66 லட்சம் கன மீட்டா் அளவு குப்பைகள் பயோ-மைனிங் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இப்பணியின் போது பிரித்து எடுக்கப்படும் குப்பைகளிலிருந்து சுமாா் 1.05 லட்சம் டன் எடையுள்ள ஆா்.டி.எப். எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து எடுக்கப்பட்டு, சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி நிலக்கரிக்கு மாற்றாக மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் காா்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு சுமாா் 7.50 மெட்ரிக் டன் அளவு தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT