தமிழ்நாடு

வாணி ஜெயராம் மறைவு: கேரள ஆளுநர், முதல்வர் உள்பட பலர் இரங்கல்!

DIN

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மறைவிற்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல பாடகி கே.எஸ்.சித்ரா உள்ளிடோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

பிரபல பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் இன்று பிற்பகல் (பிப். 4) காலமானார்.

அண்மையில் குடியரசு விழாவையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதைப் பெறுவதற்கு முன்பாக அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இசையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மறைவிற்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆரிஃப் முகமது கான்: பிரபல பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மலையாள மெல்லிசைப் பாடல்கள் மற்றும் மற்ற மொழிகளில் அவரது பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

பினராயி விஜயன்: வாணி ஜெயராம் மிகவும் திறமை வாய்ந்த பாடகி. அவரது இன்னிசைக் குரலுக்கு எப்போதும் ரசிகர்கள் இருப்பார்கள். இசையுலகில் அவரது குரலின் மூலம் தனி இடம் பிடித்துள்ளார். பல இளைய தலைமுறை பாடகர்களுடன் இணைந்து பாடி அவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார். அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும்,  அவரது பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். அவரது மலையாள மொழிப்புலமை அவரது பாடல்களில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். அதனால் அவர் கேரளத்தைச் சாராதவர் என்பதை கண்டறிய ரசிகர்களுக்கு அவர் வாய்ப்பே கொடுக்கவில்லை. அவரது இழப்பு இந்திய இசையுலகிற்கு பேரிழப்பு.

கே.எஸ்.சித்ரா: வாணி ஜெயராம் அவர்களின் மறைவு குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் மிகப் பெரிய இசை மாமேதை. அவரது இழப்பு இசையுலகுக்கு மாபெரும் இழப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசினேன்.

77 வயதான வாணி ஜெயராம் மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT