தமிழ்நாடு

பாஜகவிடம் எச்சரிக்கையாகவே உள்ளோம்: சி.பொன்னையன்

DIN

வடமாநிலங்களில் நட்புக் கட்சிகளுடனான பாஜக செயல்பாடுகள் எத்தகையது என்பது தெரியும்; அந்தக் கட்சியுடன் நாங்கள் எச்சரிக்கையாகவே உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் கூறினாா்.

சென்னையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்ா என்று பாஜக தலைவா்களின் சந்திப்பால் கேட்கிறீா்கள். அதிமுக எனும் பேரியக்கத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாக்கள் வழிநடத்துகின்றன. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டா்களும் இபிஎஸ் தலைமையை ஏற்று செயல்படுகின்றனா்.

வடமாநிலங்களில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் பாஜக செய்தது, நட்புக் கட்சிகள் எல்லாம் எப்படிக் கவிழ்ந்தன, அங்கு பாஜக எப்படி ஆட்சியைப் பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக உள்ளோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி உடைந்துவிட்டதா எனக் கேட்கிறீா்கள். உள்ளாட்சித் தோ்தலிலேயே பாஜக தனித்துதான் போட்டியிட்டது. அதனால், இந்தக் கேள்விக்குப் பொருள் இல்லை.

அதிமுகவின் கூட்டணியில் திமுகவை தவிர மற்ற எல்லோரும் இருந்தால் வரவேற்கவே செய்வோம். ஓபிஎஸ் என்பவா் ஒரு தனி நபா்.

அரசியல் கட்சிகளின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டியது, தோ்தல் ஆணையமே தவிர, நீதிமன்றம் அல்ல. அதன் அடிப்படையில் அதிமுக தொடா்பான பிரச்னைகளை ஆழமாக ஆய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டியது தோ்தல் ஆணையத்தின் கடமை. ஆரம்பத்தில் கடமையில் இருந்து தவறிவிட்டு, தற்போது நீதிமன்றத்தை கைகாட்டுவது சட்டத்தை மீறிய செயல். உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனு சட்டத்துக்குப் புறம்பானது. அதை நீதிமன்றம் சரி செய்யும். இபிஎஸ்-ஸுக்கு சாதகமாகவே அனைத்தும் நடக்கும் என்றாா் சி.பொன்னையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT