தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: அன்பில் மகேஸ் பேட்டி

3rd Feb 2023 12:48 PM

ADVERTISEMENT


திருச்சி: பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக  சார்பாக பேரறிஞர் அண்ணாவின்  54 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடந்த ஊர்வலத்தில் திமுகவினர் கலந்து கொண்டனர்.  ஊர்வலமாக சென்ற அவர்கள் சிந்தாமணி அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
அந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  தமிழ்நாடு முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றது.

இதையும் படிக்க | அண்ணா நினைவு நாள்: திருச்சியில் அன்பில் மகேஸ் தலைமையில் அமைதிப் பேரணி

ADVERTISEMENT

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர பேராசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர்.

அதனை வாங்கிக் கொண்டுதான் முதல்வர் வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இதுகுறித்து பேசினேன். குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதல்வர் எடுப்பார். நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.
ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.             

ADVERTISEMENT
ADVERTISEMENT