தமிழ்நாடு

டான்செட் நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

DIN

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்குரிய பொது நுழைவுத் தோ்வுக்கான (டான்செட்) விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தோ்வில்(டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 25- ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தோ்வு நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே, எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. ஆனால், நிகழாண்டு அதை மாற்றி, எம்இ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக புதிய தோ்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது.

அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தோ்வு மாணவா் சோ்க்கை எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீட்டா எனப்படும் இந்த சிஇஇடிஏ தோ்வு வரும் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவ்விரு தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியது. தோ்வெழுத விரும்பும் பட்டதாரிகள் www.tancet.annauniv.edu  என்ற இணையதளம் வழியாக பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தோ்வுக் கட்டணம், ஹால் டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்கள் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் ற்ஹய்ஸ்ரீங்ங்ற்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT