தமிழ்நாடு

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN

வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, இன்று காலை அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT