தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம்! உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!!

2nd Feb 2023 07:01 PM

ADVERTISEMENT


இரட்டை இலை சின்னத்தை அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓ. பன்னீர்செல்வம் தரப்போ அணுகவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தொடர்ந்த இந்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதில்களாவன, இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. கையெழுத்திட அதிகாரமுள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்புமனுவையே ஏற்க முடியும். 

படிக்கமக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ADVERTISEMENT

ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணிகள் கிடையாது. வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.

ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.

இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதால், கடந்த ஜூலை பொதுக்குழு விதிமாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை. பொதுக்குழு முடிவுகளையும் அங்கீகரிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT