தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை!

1st Feb 2023 01:53 PM

ADVERTISEMENT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  மணிகண்டன்(40). இவர் ஜெய்ஹிந்தபுரம் அருகே உள்ள எம்.கே புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர்  இந்து மக்கள் கட்சியில் தென்மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்றிரவு கடைக்கு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன்  மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்தபுரம்  காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஈரோடு அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மோடி, பாஜக தலைவர்கள் படமின்றி பேனர்!

அரசியல் காரணங்களுக்காக படுகொலை நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா  என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT