தமிழ்நாடு

காலமானார் குன்றக்குடி கவிஞர் மரு. பரமகுரு 

DIN

காரைக்குடி: குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப்புலவர் மரு. பரமகுரு (89) உடல் நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.

குன்றக்குடி குருமகாசந்நிதானங்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோரின் இலக்கியத்துறை − உதவியாளராக, 57 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர் மரு. பரமகுரு.

மனச்சுவடுகள், பாடுகிறேன் பரமகுரு, தெய்வத் தமிழ்மாலை ஆகிய கவிதைத் தொகுதிகளையும், தேவவிரதன் பீஷ்மர் காப்பியத்தையும் எழுதி வெளியிட்டவர்.

குன்றக்குடி ஆதீன வரலாறு, பறம்புமலை திருக்கொடுங்குன்ற வரலாறு, திருவண்ணாமலை ஆதிகுருமுதல்வர் வரலாறு ஆகிய நூல்களின் ஆசிரியர்.

அடிகளார் ஓர் உறவுப்பாலம்  நூலின் பதிப்பாசிரியர்களுள் ஒருவர். தெய்வத் தமிழ், ஆளுமைச் சிந்தனைகள் ஆகிய கட்டுரை நூல்களை எழுதியவர். சாகித்திய அகாதெமிக்காக, 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் ' எனும் நூலை உருவாக்கியவர்.

 பக்திக் கவிஞர் பரமஹம்ஸதாசரின் நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்தவர்.

திருமடத்தின் 'மக்கள் சிந்தனை' இதழின் ஆசிரியர். தவத்திரு அடிகள்பெருமானின் அனைத்து ஆக்கங்களும் அச்சாக்கம் காணப் பணிபுரிந்தவர். 

தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருது, பேரூராதீனத்து, 'நிமிட கவி' விருது, ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின், 'தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது' காப்பியக் கவிஞர், தமிழ்மாமணி விருதுகள், பட்டங்கள் பெற்றவர். 

இவருக்கு மனைவி ப. காமாட்சி அம்மாள், ப.காசிலிங்கம், ப.சுப்பாராமன், ப.சண்முகசுந்தரம் ஆகிய 3 மகன்களும் ப.கற்பகவல்லி, ப.அபிராமி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

மரு. பரமகுருவின் இறுதிச்சடங்கு நாளை வியாழக்கிழமை (டிச. 28) காலை 11 மணியளவில், குன்றக்குடியில், திருமடத்து மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.  

தொடர்புக்கு − ப. சண்முகசுந்தரம் (மகன்) 9626363808.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT