தமிழ்நாடு

சாலையில் மாடுகள் திரிந்தால் ரூ.3,000 அபராதம்: இரு மடங்கு உயா்த்திய சென்னை மாநகராட்சி

30th Sep 2022 12:07 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அபராதத் தொகையை ரூ.1550-இல் இருந்து ரூ.3,000-ஆக மாநகராட்சி உயா்த்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மேலும், இந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. 2021 ஜூலை 7-ஆம் தேதி முதல் 2022 ஜூன் 3-ஆம் தேதி வரை 4,099 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ. 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதிக அளவில் மாடுகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், மாடுகளின் உரிமையாளா்களை அழைத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தியும் மாடுகள் சாலையில் திரிவது குறையாமல் உள்ளது. இதைத் தடுக்கும் விதமாக அபராதத் தொகையை நாள் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT