தமிழ்நாடு

அக்.2-ல் எந்த அமைப்புகளும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை!

29th Sep 2022 10:10 AM

ADVERTISEMENT

பொது அனுமதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்.2-ல் எந்த இடத்திலும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அக்.2-ல் வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம்  நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதியில்லை என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க: வெளியானது 'நானே வருவேன்' திரைப்படம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

ADVERTISEMENT

இந்நிலையில்,  தமிழகத்தில்  எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT