தமிழ்நாடு

வெளிநாட்டிலிருந்து திரும்பிய 5 நாள்களிலே விபத்தில் சிக்கி இளைஞர் பலியான சோகம்!

29th Sep 2022 02:58 PM

ADVERTISEMENT

வெளிநாட்டிலிருந்து திரும்பிய 5 நாள்களிலே விபத்தில் சிக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வடிவேல் (28). இவர் மஸ்கட் நாட்டில் கொத்தனாராக பணி செய்து வந்த நிலையில் கடந்த 5 நாள்களுக்கு முன்னர் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். 

கீரனூர் கிராமத்தில் துக்க  நிகழ்ச்சிக்காக இன்று காலை கும்பகோணத்திற்கு சென்று, மாலை மற்றும் பூக்கள் வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மீண்டும்  ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கினார். 

சாக்கோட்டை பகுதியில், நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் வடிவேல் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராஜேஷ்குமார் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து நாச்சியார்கோயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வடிவேல் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய 5 நாட்களிலேயேஇளைஞர்  உயிரிழந்த சம்பவம் கீரனூர் கிராமத்தில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT