தமிழ்நாடு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

29th Sep 2022 12:04 PM

ADVERTISEMENT

வேலூர் மாவட்டத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் - நந்தினி தம்பதியினரின் இளைய மகன் துர்காபிரசாந்த் (13).

கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) மாலை, பாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

துர்காபிரசாந்த்

அப்போது, சிறுவனின் மிதிவண்டி மீது மது போதையில் சென்ற அடையாளம் தெரியாத நபரின் இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் துர்காபிரசாந்த்தை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  மூளைச்சாவு அடைந்துள்ளார்.

ADVERTISEMENT

இதனை அடுத்து அவரது பெற்றோரின் அனுமதியோடு சிறுவனின் கல்லீரல், ஒரு சிறுநீரகம் சென்னை எம்.ஜிஎம் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT