தமிழ்நாடு

கல்லூரி மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்த இளைஞர்  கைது

28th Sep 2022 01:19 PM

ADVERTISEMENT

சேலம்: கல்லூரி மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்த இளைஞரை கைது செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் நெத்திமேடு ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கொண்டலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில் அன்னதானப்பட்டி கண்ணகி தெரு பகுதியைச் சேர்ந்த தேவாஸ் கூலித் தொழிலாளியான இவர், கல்லூரி மாணவி குளிக்கும் போது விடியோ எடுத்தத்கக கூறப்படுகிறது. இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?

 புகாரின் அடிப்படையில்   சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்தது உறுதியானது. இதனையடுத்து தேவஸ் மீது போஸ்கோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT