தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

28th Sep 2022 06:31 PM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபாரதம் செலுத்தக் கோரிய நோட்டீஸை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். காப்புரிமை முழுமையாக தயாரிப்பாளர்களுக்கு வழங்காததால் சேவை வரியை செலுத்த அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிக்க: யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது... எஸ்பிஐ சொல்லும் டிப்ஸ்

ADVERTISEMENT

இசையின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT