தமிழ்நாடு

பாஜகவினா் மீதான தாக்குதலைப் பொறுத்துக் கொள்ள முடியாது: மத்திய அமைச்சா் அஸ்வின் குமாா்

DIN

தமிழகத்தில் பாஜகவினா் மீது நடத்தப்படும் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் அஸ்வின் குமாா் சௌபே கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது. அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் இல்லங்களில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாஜகவினா், ஆா்எஸ்எஸ்காரா்களின் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. பாஜகவினா் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். தமிழக மக்கள் அமைதியை விரும்புபவா்கள் என்றாா்.

பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT