தமிழ்நாடு

கணவன்-மனைவி பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முன்பு தாக்கிக்கொண்ட குடும்பத்தினர்

27th Sep 2022 07:07 PM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தகராறு காரணமாக எழுந்த புகாரில்  விசாரணைக்கு வந்த போது, கணவன் - மனைவி ஆகிய இரு  குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை  மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் காலனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோகிலா. அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கலைவாணன் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு இது வீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து கோகிலா ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் சரிவர விசாரிக்கவில்லை.

ADVERTISEMENT

இதனால் விரத்தியடைந்த கோகிலாவின் குடும்பத்தினர், மாவட்ட சமூக நலத்துறையில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்து இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சமூக நலத்துறை சார்பில் கோகிலா அளித்த புகாரின் மீது மீண்டும் விசாரணைக்காக இருதரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு வரவைத்தனர். அப்போது, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது இரு குடும்பத்தினர் கிடையே தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து, இருதரப்பினரும் சமூக நலத் துறை அலுவலகத்தில் இருந்து வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்பு ஒருவரை ஒருவர் சரமரியாக தாக்கிக் கொண்டனர். இதில், தரப்பினரை சேர்ந்தவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மேலும், கோகிலாவின் குடும்பத்தினர் கலைவாணன் குடும்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, ராணிப்பேட்டை காவல் துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT