தமிழ்நாடு

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை: அமைச்சர் சிவசங்கர்

27th Sep 2022 03:34 PM

ADVERTISEMENT

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

விழாக்காலத்தில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பது இல்லை. அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர்.

ADVERTISEMENT

ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிப்பு வராத வகையில்தான் கட்டணம் நிர்ணயம் செய்து விரைவில் அறிவிப்பார்கள்.

இதையும் படிக்க: பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார்?


பல்வேறு வித பேருந்துகளுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க வேண்டிருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண விவரத்தை அறிவிப்பார்கள்

ADVERTISEMENT
ADVERTISEMENT