தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு

27th Sep 2022 05:57 PM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் இன்று மாலை  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  12,144 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அணையின் நீர் இருப்பு 91.39 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.69 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT