தமிழ்நாடு

ஈஷாவுக்கு சுற்றுச்சூழல் விலக்கு ஏன்? - மத்திய அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

27th Sep 2022 04:42 PM

ADVERTISEMENT

ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிகுறித்து  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு எதிராக ஈஷா அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது ஏன்? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு, கல்வி நோக்கத்திற்காக கட்டடம் கட்டியதால் சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறியது. 

இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என நீங்களே சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளை கட்டடங்களுக்கு எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். 

மேலும், ஈஷா அறக்கட்டளையின் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்கு எதிராக ஏன் வழக்குத் தொடரக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதையும் படிக்க | காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?

ADVERTISEMENT
ADVERTISEMENT