தமிழ்நாடு

சான்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

26th Sep 2022 03:04 PM

ADVERTISEMENT

தனியார் பேக்கரியில் சான்ட்விச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பஜார் வீதி அருகே உள்ள தனியார் பேக்கரியில் சான்ட்விச் சாப்பிட்ட சைமன்(10), ரூபன்(7), ஜான்சன்(9) ஆகிய மூவருக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள தனியார் பேக்கரியில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் சிறுவர்களான சைமன்(10), ரூபன்(7), மற்றும் ஜான்சன்(9) ஆகிய மூவரும் சான்ட்விச் சாப்பிட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்றதும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவலர்கள் உதவியோடு பேக்கரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உணவு தயார் செய்யும்  இடத்திலிருந்து நிறத்தைக் கூட்ட பயன்படும் இரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க: பண மோசடி வழக்கு: ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்

மேலும் கடையிலிருந்த சான்ட்விச் மற்றும் இதர உணவு பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு, பேக்கரியை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  பேக்கரி கடைகளில் மாவட்டம் முழுவதுமாக சோதனை நடைபெறும் என தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT