தமிழ்நாடு

“தெரியாம பதிவிறக்கம் செய்துவிட்டேன்” கதறி அழுத சீரியல் நடிகை -நடந்தது என்ன?

25th Sep 2022 06:55 PM

ADVERTISEMENT


பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன், தெரியாம பதிவிறக்கம் செய்த லோன் ஆப் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக கதறி அழுது வெளியிட்டுள்ள விடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களான சரவணன் மீனாட்சி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும், தமிழில் வெளியான 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில், லட்சுமி வாசுதேவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்டதாகவும், எனது செல்போன் எண்ணை ஹாக் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

ADVERTISEMENT

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lakshmi Vasudevan (@lakshmivasudevanofficial)

அந்த விடியோவில் அவர் கண்ணீருடன் பேசியிருப்பதாவது, "கடந்த 11 ஆம் தேதி ரூ.5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக எனது வாட்சப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதை நான் கிளிக் செய்தவுடனேயே அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டது. சுமார் 3-4 நாள்களுக்கு பிறகு நான் ரூ.5000 லோன் வாங்கியதாக ஒரு தகவல் வந்தது. அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததால், எனது செல்போனுக்கு பல தகவல்கள், அழைப்புகள் வந்தது.

மேலும், என்னை ஆபாசமாக பேசி வாய்ஸ் தகவலும் வந்தது. அதோடு நான் இந்த ரூ.5000 காட்டவில்லை என்றால், எனது புகைப்படங்களை வைரல் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டலும் வந்தது. இதனால் நான் ஹைதராபாத் சைபர் கிரைமில் புகார் அளித்தேன்.

இதனிடையே என்னுடன் தொடர்பில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் என்னை குறித்த ஆபாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டிருந்தது எனக்கு தெரியவந்தது. அதன்பிறகே எனது செல்போன் ஹாக் செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், "இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் செய்ததால் எனக்கு இப்படியொரு வேதனையான நிலைமை ஏற்பட்டது. இதேபோன்று உங்க எண்ணிற்கும் ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், அந்த லிங்கை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க.. உங்க செல்போனும் இதேபோன்று ஹேக் செய்யப்படும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். 

லட்சுமி வாசுதேவனின் இந்த கண்ணீர் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT