தமிழ்நாடு

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது

25th Sep 2022 07:29 PM

ADVERTISEMENT


கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோவை குனியமுத்தூா், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம்  உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடா்ந்து, மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து கோவையில் 2 ஆர்.ஏ.எஃப் பிரிவுகள், மாநில கமாண்டோ படையின் 2 பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை 2 பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், உடனே இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | “தெரியாம பதிவிறக்கம் செய்துவிட்டேன்” கதறி அழுத சீரியல் நடிகை -நடந்தது என்ன?

இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

இந்நிலையில், கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: கோவையில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்பாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள்.

அமைதியை நிலைநாட்ட பல்வேறு மத அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT