தமிழ்நாடு

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயணச் செலவை ஏற்றது தமிழ்நாடு அரசு

24th Sep 2022 07:20 PM

ADVERTISEMENT

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்டு அழைத்து வருவதற்கான பயணச் செலவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தனியார் ஆள்சேர்ப்பு முகமை வழியாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்கு தாய்லாந்து சென்ற தமிழர்கள் உள்பட 300 பேரை சட்டவிரோத பணிகளில் ஈடுபட வலியுறுத்தி கட்டாயப்படுத்தி மியான்மர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க | சென்னையில் தோன்றிய வானவில்

அவா்கள் சட்ட விரோத வேலைகளைச் செய்ய மறுத்ததால், வேலை அளிக்கும் நிறுவனத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அவர்களில் 17 தமிழர்கள் தமிழக அரசுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இதையும் படிக்க | தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கை

இந்நிலையில் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவை ஏற்பதாக தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்திலிருந்து திரும்புவதற்கான விமானக் கட்டணத்தை ஏற்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT