தமிழ்நாடு

பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது: அன்பில் மகேஷ்

24th Sep 2022 03:51 PM

ADVERTISEMENT

 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் பல்கலைக்கழக மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதுபோல் தற்போது மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். 

ADVERTISEMENT

படிக்க: பெண்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் இந்தியா முன்னேறும்: ராகுல்

பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்துவருவது குறித்துக் கேட்டதற்கு ஆக்கப்பூர்வமான கருத்து யார் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு யாராவது கருத்து கூறினால் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம். நாம் தொடர்ந்து மக்களுக்கு நல்லவித பணிகளைச் செய்வோம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும். தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களோடு இணைக்கப்படாது. தமிழகத்தில் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு இறையாண்மைக்கு எதிராக செயல்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT