தமிழ்நாடு

‘பசுமைத் தமிழ்நாடு’ இயக்கத்துக்கு தனி இணையதளம்

24th Sep 2022 11:43 PM

ADVERTISEMENT

‘பசுமைத் தமிழ்நாடு’ இயக்கத்துக்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த இயக்கத்தின் தொடக்க கட்டமாக, நிகழாண்டில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவா்களுடன் இணைந்து அவா் தொடங்கினாா்.

தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடா்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயா்த்த பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்டுள்ள பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

திட்டத்தின் நோக்கம்: பசுமை இயக்கத்தின் கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகா்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள்,

ADVERTISEMENT

நீா்ப்பிடிப்புப் பகுதிகள், ஆற்றுப் படுகைகள், பிற பொது நிலங்களில் உள்ளூா் மர வகைகள் நடப்படும். மேலும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளா்க்க பசுமை இயக்கத்தின் கீழ் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவா்.

பசுமைத் தமிழ்நாடு இயக்கத்துக்காக பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்

நாற்றங்கால்கள் மூலமாக, 2.80 கோடி மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டுள்ளன. நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமைத் தமிழ்நாடு இயக்கத்துக்காக ஜ்ஜ்ஜ்.ஞ்ழ்ங்ங்ய்ற்ய்ம்ண்ள்ள்ண்ா்ய்.ஸ்ரீா்ம் என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத் திறன் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன.

மாவட்டங்களில்... சென்னையை அடுத்த வண்டலூரில் பசுமைத் தமிழ்நாடு இயக்கமானது, முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT