தமிழ்நாடு

தனியார் நிறுவனத்திற்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

22nd Sep 2022 08:52 AM

ADVERTISEMENT

தனியார் நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களை மிரட்டிய விவகாரத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரிபாகம் தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்திற்கு சென்ற தாம்பரம் எம்எல்ஏவும், திமுக மாவட்ட நிர்வாகியுமான ராஜா, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது மிரட்டல் விடுத்துள்ளார். இந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இதையும் படிக்க | தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

ADVERTISEMENT

இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT