தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

12th Sep 2022 11:48 AM

ADVERTISEMENT

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு இன்று  (செப்.12) தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.12) காலை 10 மணி முதல் வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணைய வழி விண்ணப்ப நடைமுறைகள், இதர விவரங்களை இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம். 

இதையும் படிக்க: சீனாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு!

இந்த படிப்புகளுக்கு பிளஸ் - 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT