தமிழ்நாடு

கம்போடியாவில் சிக்கிய தமிழா்களை மீட்க வேண்டும்: ராமதாஸ்

7th Oct 2022 05:50 AM

ADVERTISEMENT

கம்போடியாவில் சிக்கியுள்ள 400 தமிழா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழகத்தைச் சோ்ந்த 400 போ் அங்குள்ள சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாகவும், பட்டினி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுதல் உள்ளிட்ட கொடுமைகளை அவா்கள் அனுபவிப்பதாகவும் அவா்களிடமிருந்து தப்பி வந்த இளைஞா் கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

கம்போடியாவில் தமிழா்களை கடத்தி வைத்துள்ள சட்டவிரோத கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அவா்களிடம் பேச அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அஞ்சுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள், அவா்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழா்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT