தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

7th Oct 2022 08:25 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,556 கன அடியாக சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மழை  தணிந்ததால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,818 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,556 கன அடியாக குறைந்தது.

இதையும் படிக்க | மின் கட்டண உயா்வு: அடுக்குமாடி நுகா்வோருக்கு மின் வாரியம் குறுந்தகவல்

ADVERTISEMENT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.79 அடியாகவும், நீர் இருப்பு 91.55 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT