தமிழ்நாடு

36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

DIN

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் இந்த மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையான எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க் 3) மூலம் அந்த செயற்கைக் கொள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இந்த மாதம் மூன்று அல்லது நான்காம் வாரத்தில் 36 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படவிருக்கின்றன. இத்தகவலை இஸ்ரோ செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT