தமிழ்நாடு

திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் பலி! 12 பேருக்கு சிகிச்சை

6th Oct 2022 01:18 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் செயல்படும் தனியார் காப்பகத்தின் உணவகத்தில் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை எடுத்த திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 15 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இதில் ஒரு சிறுவன் ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் சென்று விட்டதால் மற்ற 14 பேரும் காப்பகத்திலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் சிறுவர்கள் அனைவரும் நேற்று இரவு ரசமும், லட்டும் சாப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து இரவு முதலே சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து சிறுவர்கள் அனைவரும் அவிநாசி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மாதேஷ்(16), பாபு உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிக்க | இயல்பைவிட கூடுதலாக 75% பருவமழைக்கு வாய்ப்பு: அமைச்சர் விளக்கம்

மேலும் தரனீஸ் 12, கௌதம் 18, சபரீஷ் 10, சதீஷ் 9, குணா 8, ஹர்ஷத் 9, ரித்திஷ் 8, ஸ்ரீகாந்த் 13, மணிகண்டன் 17 ஆகிய 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தனியார் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT