தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்தவில்லை.. இணைப்பு துண்டிக்கப்படும்: இது மோசடி.. மக்களே உஷார்

6th Oct 2022 05:59 PM

ADVERTISEMENT


ஈரோடு: மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும், உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என்றும் வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இவ்வாறு வந்த மோசடி அழைப்பினால் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் ரூ.2.46 லட்சத்தை இழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

அதாவது, ஓய்வு பெற்ற ஆசிரியர், இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்திவிட்டு அதற்கான ரசீதையும் பெற்றுவிட்டார்.

இதற்கிடையே, ஆசிரியருக்கு ஒரு குறுந்தகவல் வந்ததுள்ளது. அதில் மின் கட்டணம் செலுத்தவில்லை. உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டபடி அந்த எண்ணுக்கு 10 ரூபாய் பணம் அனுப்ப, அவருக்கு வந்த ஓடிபி எண்ணை தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அவரும் தனக்கு வந்த ஓடிபியை தெரிவிக்க, சற்று நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2.46 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்த போதுதான், அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

இதையடுத்து உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினருக்குப் புகார் அளித்துள்ளார். உடனடியாக இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT