தமிழ்நாடு

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்: மத்திய அரசு கேள்வி

5th Oct 2022 01:33 PM

ADVERTISEMENT

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் குறித்து தமிழக அரசுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கலைஞர் கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டமானது கடற்கரையில் இருந்து 8,551.13 சதுரமீட்டா் அளவில் செயல்படுத்தப்பட உள்ளது. 42 மீட்டா் உயரத்துக்கு பேனா வடிவ சிலை அமைக்கப்படுகிறது.

இது குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித் துறைக்கு  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதா? நினைவுச் சின்னத்தை பார்வையிட வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க: ’இது விலைமதிப்பற்றது’ ரஜினியின் புகைப்படத்தைப் பகிர்ந்த மகள் ஐஸ்வர்யா

மேலும் சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT