தமிழ்நாடு

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

4th Oct 2022 03:48 PM

ADVERTISEMENT

சேலம்: தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுதப் பூஜை, விஜயதசமி பூஜை அரசு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் ஏற்காடு சுற்றுலாத் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

லேடிஸ் சிட் ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில், அண்ணா பூங்கா, கரடியூர் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு தளங்களுக்கு குடும்பத்துடன் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மேலும், படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, லேசான மழையுடன், பனிமூட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT