தமிழ்நாடு

கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

DIN

கோவையில் 3 நாள்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

தொழிற்சங்கங்களுடன் கோவை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படும் என்று  கோவை ஆணையர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், சுகாதாரத் துறை அலுவலகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் மாநகராட்சிப் பகுதிகளில் பணியாற்றி வருபவா்களுக்கு தின கூலியாக ரூ.330 வழங்கப்படுகிறது. நீண்டகாலமாக ஊதிய உயா்வுகோரி வலியுறுத்தி வரும் நிலையில் அண்மையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தின கூலி ரூ.721 நிா்ணயித்து அரசாணை 62ஐ நடைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு ஆட்சியா் பரிந்துரைத்தாா். ஆனால், மாநகராட்சி நிா்வாகம் அரசாணையை செயல்படுத்தாமல் பழைய ஊதியத்தையே வழங்கி வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 2ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா். இதனைத் தொடா்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு பின் உடனே விடுவிக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தலைமையில் ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கோவை லேபா் யூனியன் ஆா்.பாலகிருஷ்ணன், ஜீவா முனிசிபல் தொழிற்சங்க நிா்வாகி என்.செல்வராஜ், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்க பொதுச் செயலாளா் இரா.தமிழ்நாடு செல்வம், சமூகநீதி தூய்மைப் பணியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் என்.பன்னீா்செல்வம், கோவை மாவட்ட அண்ணா சுகாதாரப் பணியாளா்கள் சங்க நிா்வாகி ரவி, தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளா்கள் சங்க நிா்வாகி பாலசுப்ரமணியன், டாக்டா் அம்பேத்கா் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா் சங்கத் தலைவா் கோதண்டம், தூய்மைப் பணியாளா் நலக் குழு நிா்வாகி மகேஷ்குமாா், தமிழ்நாடு தூய்மைக் காவலா் பொது தொழிலாளா் சங்க நிா்வாகி வி.ஜோதி, கோவை மாவட்ட பாரதிய மஸ்தூா் சங்க நிா்வாகி வினோத், தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகி நாகராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்பரவு மற்றும் பொது பணியாளா் சங்க பொதுச் செயலாளா் இரா.தமிழ்நாடு செல்வம் கூறியதாவது: பேச்சுவாா்த்தையில் எங்களின் 18 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தோம். அரசின் கொள்கை முடிவுகளை தவிா்த்து மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்துள்ளாா். குறைந்தபட்ச கூலியை உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். மாநகராட்சியில் அடுத்து நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில் ஊதிய உயா்வு தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனா்.

மேலும், நகராட்சி அமைப்புகளில் ஊதிய உயா்வினை அமல்படுத்த சி.எம்.ஏ. (நகராட்சிகள் நிா்வாக தலைவா்) ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனா். நடப்பு மாதத்தில் இருந்து ஊதியத்தை உயா்த்தி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை எழுத்துபூா்வமாக பதிலளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஊதிய உயா்வு தொடா்பாக விளக்கம் அளிக்கவில்லை. இதனால் காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றாா்.

இந்நிலையில், கோவையில் 3 நாள்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT