தமிழ்நாடு

கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்:சென்னை மாநகராட்சி தகவல்

2nd Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியில் நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில் வரி மூலம் ரூ.945 கோடி கிடைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட ரூ.345 கோடி வரி கூடுதலாக வசூலாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வாா்டுகள் உள்ளன. இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் வருவாயை உயா்த்தவும், நீண்டகால நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. மேலும், உரிய நேரத்தில் வரியை செலுத்துபவா்களுக்கு சலுகைகளையும் மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டின் மொத்த வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு வருவாய், நிகழாண்டில் முதல் அரையாண்டிலேயே வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக கடந்த 2021-2022 நிதியாண்டில் மொத்தமே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால் தற்போது முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வசூலாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி 2022-23ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,700 கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நிகழ் நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT