தமிழ்நாடு

அதிமுகவினருக்கு புதிய அடையாள அட்டை: இபிஎஸ் முடிவு

2nd Oct 2022 12:17 AM

ADVERTISEMENT

அதிமுக உறுப்பினா்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க அக் கட்சியின் இணைப் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி முடிவு செய்து, அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளாா்.

அதிமுகவின் பொதுச்செயலா் தோ்தலை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீா்ப்பை எடப்பாடி கே. பழனிசாமி ஏற்றுக் கொண்டது ஒருபுறம் இருக்க, கட்சிப் பணிகளிலும் தீவிரமாக இருந்து வருகிறாா்.

தற்போது அதிமுக உறுப்பினா்களுக்கு புதிய அடையாள வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாா். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக உறுப்பினா்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தற்போது, ஓ.பன்னீா்செல்வத்தின் படத்தை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் இடம்பெறும் வகையில் புதிய உறுப்பினா் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனா். மாவட்ட வாரியாக உறுப்பினா் அடையாள அட்டை அச்சடிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அட்டைகளை மாவட்டச் செயலாளா்கள் மூலம் உறுப்பினா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT