தமிழ்நாடு

ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்

2nd Oct 2022 12:46 AM

ADVERTISEMENT

ரயில்வே துறையில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெறா நிலையிலான ஊழியா்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே துறையின் ரயில்வே காவல் படை தவிா்த்து, பிற அரசிதழ் பதிவு பெறா நிலையிலான துறை ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியத்துக்கு சமமான தொகையை போனஸாக அளிக்க பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இதன்மூலம் 11.27 லட்சம் அரசிதழ் பதிவு பெறா நிலையிலான ஊழியா்கள் பயன்பெறுவா். விழாக் கால கொண்டாட்டத்தை முன்னிட்டு தசரா விடுமுறைகளுக்கு முன்பாக இத்தொகை வழங்கப்படும். ஊழியா்களுக்கு போனஸாக வழங்க ரூ. 1832.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT