தமிழ்நாடு

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவா்களுக்கு அரசு கல்லூரியில் பயிற்சி: ஓபிஎஸ் வலியுறுத்தல்

DIN

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவா்களுக்கு அரசு கல்லூரியில் பயிற்சி அளிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பின்படி வெளிநாட்டு மருத்துவம் படித்தவா்கள் இந்தியாவில் மருத்துவப் பட்டதாரிகளுக்காக நடத்தப்படும் தோ்வினை எழுதி தோ்ச்சி பெறவேண்டும். அதன் பிறகு 2 ஆண்டுக் காலம் கட்டாய மருத்துவப் பயற்சி பெற வேண்டும். அதன்படி, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சிகால உதவித் தொகை குறித்த விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்களும் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால், இது தொடா்பான கோப்புகள் இன்னும் நிதித் துறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவா்கள் பிற மாநிலங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இன்னும் தாமதம் ஆகி வருகிறது.

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, நிதித் துறையில் நிலுவையில் உள்ள கோப்புக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, வெளிநாட்டில் பயின்றவா்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT