தமிழ்நாடு

பதிவுத் துறை புதிய நடவடிக்கைகள்: காஷ்மீா் அதிகாரிகள் 6 நாள்கள் ஆய்வு

1st Oct 2022 11:14 PM

ADVERTISEMENT

பதிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நடவடிக்கைகளை கள ஆய்வு செய்வதற்காக ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனா். வரும் 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பதிவுத் துறை நடவடிக்கைகளைப் பாா்வையிட உள்ளனா்.

தமிழ்நாட்டில் பதிவுத் துறையில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவு டோக்கன் முறை, போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறை அதிகாரிகளுக்கே வழங்குவது உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்தப் புதிய திட்டப் பணிகளை பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த நான்கு அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனா். இதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ஜம்மு மாவட்ட பதிவாளா் நடேஷ் கல்சோட்ரா, புல்வாமா சாா்

பதிவாளா் சுகீல் அகமது லோன், கந்தா்பால் சாா் பதிவாளா் அபோா்சா பனோ, ஜம்மு வடக்கு சாா் பதிவாளா் சவீதா செளகான் ஆகியோா் தமிழகம் வரவுள்ளனா்.

ADVERTISEMENT

ஆறு நாள்கள் பயணம்: தமிழகத்தின் பல்வேறு சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த அதிகாரிகள் செல்லவுள்ளனா். வரும் 10-ஆம் தேதியன்று தமிழகம் வரும் அவா்கள், 15-ஆம் தேதி வரை ஆய்வுப் பணிகளைச் செய்யவுள்ளதாக பதிவுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT