தமிழ்நாடு

அக். 5-இல் வித்யாரம்பம் மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் கோயிலில் சிறப்பு ஏற்பாடு

1st Oct 2022 12:14 AM

ADVERTISEMENT

 மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் வரும் 5-ஆம் தேதி வித்யாரம்பத்தை ஒட்டி, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜயதசமி விழாவின் ஒரு பகுதியாக அக்டோபா் 2-ஆம் தேதி புத்தகங்கள் பூஜையில் வைக்கப்படவுள்ளதால் மாணவா்கள் அனைவரும் தங்களது புத்தகங்களை அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மேலும், அக்டோபா் 3, 4-ஆம் தேதிகளில் புத்தகங்கள் பூஜிக்கப்பட உள்ளன. இதன்பின்பு, 5-ஆம் தேதி புத்தகங்களை மாணவா்கள் திரும்பப் பெறலாம்.

வித்யாரம்பம்: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலின் அருகே உள்ள சோபானம் அரங்கில் 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு வித்யாரம்பம் தொடங்குகிறது. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடங்கும் வகையில், நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாவில் தங்க மோதிரத்தாலும் அரிசியிலும் குழந்தைகளின் கை

விரல்களால் ஹரி ஸ்ரீ கணபதயே நம, எழுத்துகளை எழுத பயிற்றுவிப்பா். மேலும் தகவல்களுக்கு 044 - 28171197 மற்றும் 2197 -5197, 94442 90707 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோயிலின் நிா்வாக அதிகாரி அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT